கும்லா:
இரட்டை குழந்தைகளால் அபசகுணம் என கருதி பெற்ற தாயே குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தம்கா மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இதை அபசகுணமாக கருதிய அந்த பெண், வீட்டில் உள்ள கிணற்றில் இரு குழந்தைகளையும் வீசினார். இதில் இரு குழந்தைகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது.
போலீசுக்கு பயந்து அந்த பெண் தலைமுடியை கத்தரித்துக் கொண்டு வீட்டில் சுயநினைவின்றி மயங்கியது போல் நாடகமாடினார். போலீசார் அந்த பெண்ணை மீட்டு டாக்டர்களிடம் பரிசோதனை செய்தபோது, அவர் நன்றாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
Patrikai.com official YouTube Channel