கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதால், எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவர்கள் புறக்கணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவும் அபாயத்திலிருந்து காத்துக்கொள்ளவே அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தை தவிர்ப்பார்கள் என்று கூறப்படுகிறது.
அதேசமயம், இதுதொடர்பாக அந்தக் கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை என்றாலும், 65 வயதிற்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு புறக்கணிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரசின் கொல்கத்தா உத்தர் தொகுதியின் உறுப்பினர் 67 வயதாகும் சுதிப் பந்தோபத்யாய், மக்களவையில் தனது கட்சியின் பிற உறுப்பினர்களுடன் கொல்கத்தாவிலிருந்தே ஒருங்கிணைந்து செயல்படவுள்ளதாக கூறியுள்ளார்.
அதேபோல், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுகேந்து சேகர் ராயும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றுள்ளார். இவருக்கு தற்போது 71 வயதாகிறது.