லக்னோ:
தலித்களின் வீடுகளில் கொசுத்தொல்லை இருப்பதாக யோசி தலைமையிலான பாஜக அரசின் பெண் அமைச்சரான அனுபமா ஜெய்ஸ்வால் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில்தான் பாஜக மத்திய அமைச்சர் உமாபாரதி பேசும்போது, தலித்துக்களுடன் உணவருந்தி அவர்களைப் புனிதப்படுத்த நான் ஒன்றும் ராமன் அல்ல என கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தலித்களின் வீடுகளில் கொசுத்தொல்லை இருப்பதாக கூறி மேலும் சர்ச்சையை தீவிரப்படுத்தி உள்ளார் உ.பி. மாநில பெண் அமைச்சர். உள்ளார்.
உ.பி.,யில் பாரதியஜனதா தலைமையிலான மாநில ஆட்சி நடைபெற்று வருகிறத. மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார்.
இந்நிலையில் உ.பி. மாநில கல்வி அமைச்சரான அனுபமா ஜெய்ஸ்வால், தலித்களின் வீடுகளில், இரவு முழுவதும் கொசுக்கள் கடிக்கின்றன. அதை பொருட்படுத்தாமல், அவர்களின் வீடுகளுக்கு சென்று, அரசு திட்ட பயன்களை அளித்து வருகிறோம், தனது இந்த பணி எனக்கு திருப்தியை அளிக்கிறது. எனக்கு ஒதுக்கப்பட்டதை விட அதிக தலித்களின் வீடுகளுக்கு நான் சென்று வருகிறேன் என்றார்.
மேலும், இந்த அனுபவம் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாலும், அமைச்சர்களில் சிலர் தலித்களின் வீடுகளுக்கு செல்லும்படி கூறினால் ஏற்க மறுக்கின்றனர் என்றும், ஆனால், நான்,நான்கு தலித்களின் வீடுகளுக்கு செல்ல விரும்புகிறேன் என்றார்.
பெண் அமைச்சரின் கொசுக்கடி பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஏற்கனவே உ.பி. மாநில அமைச்சரான சுரேஷ் ராணா தலீத் பகுதிகளுக்கு ஆய்வுக்கு சென்றபோது, தலித்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டுக்கு சென்று, அவர்கள் தந்த உணவை சாப்பிடாமல், வெளியில் இருந்து வரவழைத்து சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மற்றொரு அமைச்சரான ராஜேந்திர பிரதாப் சிங், தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டுக்கு சென்றதை, ராமாயணத்தில், சபரி என்ற ஏழை மூதாட்டி வீட்டுக்கு, ராமர் சென்ற நிகழ்வுடன் ஒப்பிட்டு பேசியதும், சர்ச்சையை கிளப்பியது.
அதுபோல மத்திய அமைச்சர் உமாபாரதியும் தலித்துக்களுடன் உணவருந்தி அவர்களைப் புனிதப்படுத்த நான் ஒன்றும் ராமன் அல்ல என்று கூறியதும் சர்ச்சைகளை கிளறி உள்ள நிலையில், தற்போது பெண் அமைச்சரின் பேச்சு மேலும் பிரச்சினையை பற்றி எரிய செய்துள்ளது.