கொச்சி:
ளைகுடா நாடுகளில் இருந்து  உயிரிழந்த  வெளிநாட்டு இந்தியர்களின் உடல்கள் இந்தியா வந்தடைந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த உடல்களில் ஒருவரது உடல் கேரளாவை பூர்வீகமாக கொண்டவருடயது என்றும், மற்றொரு உடல்  கோவா மற்றும் தமிழ்நாட்டின் சிவகங்காவைச் சேர்ந்தவர்களின் உடல் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது
வளைகுடா நாடுகளில் உயிரிழந்த  ஏழு பேரின் உடல்கள் துபாயில் இருந்து  கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு சரக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இவர்களது உடலை இந்தியா கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து பேசிய விமான நிலைய அதிகாரி ஒருவர்,  கோவா மற்றும் சிவகங்கா மற்றும் கேரளாவின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அனைத்தும் சாலை வழியாக அந்தந்த இடங்களுக்கு கொண்டு  செல்லப்படும் என்று தெரிவித்தார்.
கொல்லத்தைச் சேர்ந்த ஜான் ஜோஹன்னன்,  புன்னக்கலைச் சேர்ந்த டேவிட் ஷமி, கண்ணூர் செரன்னல்லூரின் சத்யன், திருச்சூர் ஓ.சி மத்தாய் மற்றும் சிஜோ ஜாய்,  சிவகங்காவின் ஸ்ரீனிவாசன் மற்றும் ஹென்ரிக் டி சோசா ஆகியோரின் உடல்கள் என்று மலப்புரத்தின் சிறப்பு கிளை சிஐடியின் உதவி துணை ஆய்வாளர் தாமஸ் கூறினார்.
விமான நிலையத்தில் சோதனை பணிகள் முடிந்த பின்னர் இந்த உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும், அதற்காக சிறப்பு பாஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தூதரக அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறவதற்காக, இந்த உடல்கள்   வளைகுடா பிராந்தியத்தில் இருந்து சுமார் ஒரு வாரம் காலமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு அல்லாத காரணங்களால்,  வளைகுடா நாடுகளில் உயிரிழந்த கேரள மக்களின் உடல்கள்,  குடும்ப உறுப்பினர்களிடம் எந்த தாமதமும்  வரப்பட வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.  இதையடுத்து, தேவையான உதவிகளை செய்யுமாறு மோடி உள்துறை அமைச்சகத்திற்கு உத்தர விட்டார். பிரதமர் மோடியின் உத்தரவை தொடர்ந்தே இந்த உடல்கள் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளன. கொரோனாபரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு  அமலில் உள்ளதால், இந்த உடல்கள்  சரக்கு விமானங்களில் கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.