சென்னை: நடைபெற்று முடிந்த 18வது மக்களவை தேர்தலில், தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை பிடிக்காதவர்கள், எந்தவொரு கட்சிக்கும் வாக்காளிக்காமல் நோட்டாவுக்கு வாக்களித்து வருகின்றனர்.
அதன்படி, தமிழ்நாட்டில், அதிகபட்சமாக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 26 ஆயிரத்து 450 வாக்குகள் நோட்டாவுக்கும், குறைந்தபட்சமாக, கன்னியாகுமரியில் 3 ஆயிரத்து 756 வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளிலும், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு போட்டியாக நோட்டாவுக்கும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் வரை நோட்டாவுக்கு கிடைத்துள்ளது. இது மக்கள் அரசியல் கட்சிகள்மீது வைத்துள்ள வெறுப்புணர்வை கோடிட்டு காட்டியுள்ளது.