மும்பை

ஐடியில் இடம் கிடைத்தும், அருகில் இல்லாத காரணத்தால் பல மாணவர்கள் சேராததால்  இடங்கள் காலியாக உள்ளன.

பொதுவாகவே ஐஐடியில் சேர மாணவர்கள் இடையில் கடும் போட்டி நிலவும்.  அங்கு படிப்பதே ஒரு கவுரவம் எனவும் மாணவர்களும் பெற்றோரும் நினைப்பது வழக்கம்.  ஆனால் வழக்கத்துக்கு மாறாக இது வரை ஒதுக்கப்பட்ட இடங்களில் 67 இடங்கள் மாணவர்கள் சேராததால் காலியாக உள்ளன.

தங்களின் இருப்பிட நகரில் உள்ள ஐஐடியில் இடம் அளிக்கப்படாமல் வேறு இடங்களில் இடம் கிடைத்தது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது.  புகழ்பெற்றது எனக் கூறப்படும் மும்பை ஐஐடியில் மட்டும் இதுவரை 3 மாணவர்கள் சேரவில்லை.  இதுவரை ஐந்து சுற்றுக்களாக மாணவர் சேர்க்கை நடை பெற்றுள்ளது.  இந்த மூன்று இடங்களும் ஆறாம் சுற்றில் வேறு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல் டில்லி ஐஐடியில் நான்கு இடங்களும், கான்பூரில் ஆறு இடங்களும், காசி மற்றும் கவுகாத்தியில் தலா பத்து இடங்களும் காலியாக உள்ளன.  இவைகளும் ஆறாம் சுற்றில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இது போல இடம் கிடைத்தும் மாணவர்கள் சேராதது தொடர்ந்து மூன்று வருடங்களாக நடைபெறுகிறது.  போன வருடம் மட்டும் 76 இடங்கள் காலியாக இருந்தன.

ஆறாம் சுற்றுதான் இறுதி என்றாலும், இதற்குப் பிறகும் மாணவர்கள் சேராமல் இருந்தால் அநேகமாக ஏழாம் சுற்றும் இருக்கக் கூடும்..