டர்புர்: சூடானில் பழங்குடியினரிடையே ஏற்பட்ட மோதலில் 83 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் டர்புர் மாகாணத்தின் உள்ள அல் ஜெனீனா நகரில் மசாலித் என்ற பழங்குடியின குழுவினருக்கும், அராப் பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஏற்பட்ட வன்முறையில், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டன.
2 நாள்களாக நீடித்த மோதலில் கிட்டத்தட்ட 83 பேர் கொல்லப்பட்டனர். 160-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, மேற்கு டார்பூரில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.
இருப்பினும், தொடர்ந்து பலரும் தீவிர சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
[youtube-feed feed=1]