சிரியாவில் இதுவரை 650க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!

சிரியா போரில் 650க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நாவின் குழந்தைகளுக்கான முகமை யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிரியா போரில் 650க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூன்று பங்கிற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளியிலும் அல்லது அதற்கு அருகாமையிலும் கொல்லப்பட்டுள்ளனர்.  மேலும்  நூற்றுக்கணக்கான குழந்தைகள் நோய்களால் தாக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள்.   போதிய மருத்துவ வசதிகள் இருந்திருந்தால் அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

 

 


English Summary
more than 650 children killed in Syria war: UN