இங்கிலாந்தைச் சேர்ந்த 57 பெண் தொழில்முனைவோர் ஒன்று சேர்ந்து சென்னை டூ கோவா ஆட்டோ சவாரி மேற்கொண்டுள்ளனர்.

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பிற்கு நிதி திரட்டும் விதமாக இந்த ரிக்ஷா ரேலி நடைபெறுகிறது.

லெட்ஸ் கோவா 2025 – ரிக்க்ஷா ரேலி (Let’s Goa 2025 Rickshaw Rally) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரேலி மெட்ராஸ் மிட் டவுன் ரவுண்ட் டேபிள் 42 (MMRT42) மற்றும் மெட்ராஸ் மிட் டவுன் லேடீஸ் சர்க்கிள் 7 (LC7) ஆகியவற்றுடன் இணைந்து சிஸ்டர்ஹுட் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பதிவு நடைபெற்ற நிலையில் தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் சேவா சாதன் பள்ளியில் இருந்து இந்த ஆட்டோ பேரணியானது தொடங்குகிறது.

18 ஆட்டோக்களில் குழுவாக செல்லும் இவர்கள் வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, பட்கல் வழியாக சுமார் 1000 கி.மீ. பயணம் செய்து 6வது நாள் முடிவில் கோவாவின் பனாஜி சென்றடைவார்கள்.