வாஷிங்டன்:

மெரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் (ஒரு மில்லியன்) அதிகமான நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இதுவரை 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு, அமெரிக்காவிலும் தீவிரமாக உள்ளது. அங்கு இதுவரை 1லட்சத்து 64,266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டி ருக்கிறது. இதுவரை  3170 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக விலகல் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டியுள்ளது. ஏப்ரல் மாதம் 30ந்தேதி வரை, மாதம் முழுவதும் இந்த கட்டுப்பாடுகள் தொடரப்படும் என்றார்.

மேலும், அமெரிக்கர்கள்,  சீனா உள்பட ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள  தடை நீடிக்கும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

10 க்கும் மேற்பட்ட குழுக்களாக மக்கள் கூட அனுமதியில்லை, உணவகங்கள் அல்லது மதுக்கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது உள்ளிட்ட பரிந்துரைகளும் அடுத்த மாதம் இறுதி வரை தொடரும்.

கொரோனாவை எதிர்த்க்கும் போரில் அனைவருக்கும் கடமை உள்ளது.  இது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமான மைல்கல் ஆகும்.  இனி வரும் நாட்கள் மிகவும் சவாலானவை. எனவே, அமெரிக்கர்கள் அனைவரும் இதற்குச் சரியான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இது வரை 10 லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு கோவிட்19 பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.