சென்னை:
சென்னை விமான நிலையத்திற்குள் தற்போது ஓலா வாடகை கார்கள் மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்லவும், அழைத்து வரவும் அனுமதிக்கப்படும் நிலையில், விரைவில் மேலும் சில வாடகை கார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெபற்று வருவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில், பயணிகளின் நேர விரயத்தை தவிர்க்கும் வகையில், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு வரும் வாகனங்களுக்கு தனித்தனி நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழி அடிப்படையிலான புதிய போக்குவரத்து முறை கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் அமலுக்கு வந்தது. அதன்மூலம், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் புறப்பாடு, வருகை இரண்டு பகுதிகளுக்கு வாகனங்கள் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு விமானநிலையத்தில் இருந்து வெளியேறி விடவேண்டும்.
பயணிகளை ஏற்றிச் செல்ல வரும் வாகனங்கள், பயணிகளை ஏற்றிச்செல்வதற்கு தனி வழியும், பார்க்கிங் செய்வதற்கு தனிவழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றிச் செல்லும் இடத்திற்கு வந்த பிறகு பார்க்கிங் வசதியை பயன்படுத்த முடியாது என்பதோடு, பயணிகளை ஏற்றிக் கொண்ட பின் விமான நிலையத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும்.
பார்க்கிங்கில் உள்ள வாகனங்கள், பார்க்கிங் பகுதியில் பிக்அப்புக்கு என குறிக்கப்பட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, விமான நிலையத்தில் இருந்து வெளியேற வேண்டும்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன் இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ஓலா தவிர்த்த பிற வாடகை வாகனங்கள் மற்ற நிறுவனங்களன் வாடகை கார்கள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. விமான ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தனியார் டாக்சி நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பல முறை போராட்டங்களும் நடைபெற்ன.
இந்த நிலையில், மேலும் சில தனியார் நிறுவனங்களின் வாகனங்கள் விமான நிலையத்திற்குள் பயணிகளின் வசதிக்காக அனுமதிக்கப்பட உள்ளதாகவும், இந்த சேவை அடுத்த மாதம் அமலுக்கு வரும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதற்காக ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அடுத்த மாதம் முதல் சென்னை விமான நிலையத்தில் பயன்பாட்டு மேலும் சில நிறுவனங்களின் வண்டிகள் சேவை தொடங்கும் என்றும், ஏற்கனவே இருந்த சில இரண்டு தனியார் வாடகை டாக்சி நிறுவனங்கள் விலகி விட்ட நிலையில், தற்போது சில நிறுவனங்களை இணைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், விரைவில் அவர்களின் சேவை தொடங்கும் என்று தெரிவித்து உள்ளனர்.