பெங்களூரு:
காபிடே அதிபர் சித்தார்த் தற்கொலை செய்து இன்னும் ஒரு மாதம் கூட தாண்டாத நிலையில், கோமாவில் இருந்த அவரது தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிக்மங்களூருவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரும், பிரபல காபிடே நிறுவனருமான சித்தார்த் கடன் தொல்லை மற்றும் வரிச்சோதனை காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், ஜூலை மாதம் மாதம் 29ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது தந்தை கங்கய்யா ஹெக்டே. இவரது வழிகாட்டியில்டுதலில்தான் சித்தார்ந்தா உயர்ந்த நிலைக்கு வந்ததாக தெரிவித்திருந்தார். தனது தந்தையிடம் இருந்துதான், எல்லோரிடமும் அன்பாக பழக வேண்டும் என்பதை கற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு வயது முதிர்வு காரணமாக கங்கய்யா ஹெக்டேவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சித்தார்த்தா தற்கொலை செய்வதற்கு 3 நாட்களுக்கு முன்புதான், அவர் கோமா நிலைக்கு சென்றதாக கூறப்பட்டது.
அதன்பிறகு மகன் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டது தெரியாத நிலையிலேயே, தற்போது சிகிச்சை பலன்றி கங்கய்யா ஹெக்டேவும் மரணம் அடைந்தார். இது அவர்களது குடும்பதினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
[youtube-feed feed=1]