ஜெனிவா: உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று தீவிரமாக பரவி வருவதாகவும், இதுவரை  35,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும். 20 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துஉள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தொற்றே இன்னும் முழுமையாக விலகாத நிலையில்,. புதிய தொற்று நோயாக குரங்கம்மை பரவி வருகிறது. இந்த நோய் தீவிரமாக பரவத்தொடங்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்து உள்ளது. தற்போது வரை 92 நாடுகளில் குரங்கம்மை பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், 35 ஆயிரம் பேர் குரங்கம்மை கிருமிக்கு இலக்காகி இருப்பதாகவும்   குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்திருப்பதாகவும்  உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

நோய் பரவல் காரணமாக, உலகம் முழுவதும் குரங்கம்மை ப தடுப்பூசிகளின் தேவை சர்வதேச அளவில் பன்மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.