டில்லி:
டில்லி த்வாரகாவில் நேதாஜி சுபாஷ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி உள்ளது. இதன் மகளிர் விடுதியும் அந்த வளாகத்தில் அமைந்துள்ளது.
கடந்த 16ம் தேதி விஷத் தன்மை கொண்ட ஒரு ராட்சத பல்லிவிடுதிக்குள் நுழைந்துவிட்டது. முதல் விடுதியின் 3வதுதளத்தில் உள்ள பெண்கள் அறைகளுக்கு அருகே ராட்சத பல்லி இருந்த புகைப்படம் பேஸ்புக்கில் பரவியது. ‘‘அனைவரும் அறை கதவை மூடிக் கொண்டு பாதுகாப்பாக இருங்கள்’’ என்று அந்த பதிவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வகை ராட்சத பல்லியால்மனித உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், இது கடித்தால் வலிக்கும். அதோடு உடல்நிலை பாதிக்கவும் செய்யும். கடந்த 16ம் தேதி அன்று டில்லியில் வீசிய புயல் காற்று காரணமாக ராட்சத பல்லி விடுதிக்குள் புகுந்துள்ளது. பிற்பகல் 11.30 மணிக்கு இந்த ராட்சத பல்லியை பார்த்துள்ளனர். இறுதியில் ஒரு அறையில் குளியல் அறைக்குள் உடும்பு சென்றுவிட்டது.
தகவலறிந்து வனத்துறையினர் விரைந்தது வந்து ராட்சத பல்லியை பிடித்து சென்றனர். இதன் பின்னரே மாணவிகள் நிம்மதி அடைந்தனர். இந்த கல்வி நிறுவன வளாகம் முழுவதும் மரங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு பாம்புகள் இருப்பதை மாணவ மாணவிகள் பார்த்துள்ளனர். ஆனால் ராட்சத பல்லியை பார்ப்பது தற்போது தான் முதன் முறை என்று அவர்கள் தெரிவித்தனர்.