ரவுண்ட்ஸ்பாய்
எங்க பார்த்தாலும் மக்கள் பணம், பணம்னு ஓடறாங்க. எப்பவுமே அப்படித்தான். அப்பல்லாம் சம்பாதிக்க ஓடுவாங்க. இப்ப, சம்பாதிச்ச காச, மாத்தறதுக்காக ஓடறாங்க.
பாவம்!
சரி, பணம் அப்படின்னா என்ன?
மார்க்ஸ் இப்படிச் சொல்றார்:
பணம்
மதிப்பு என்பது ஒரு ஒப்பீட்டு வடிவம். ஒரு புத்தகத்தின் மதிப்பு என்பது பேனாக்களின் மதிப்பிற்கு சமம் என்றால், இரண்டிலும் சம அளவிலான உழைப்பு செலவிடப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
இதை வேறு விதமாக சொல்வதென்றால், இரண்டு மனிநேர உழைப்பைக் கொண்டுள்ள அனைத்து பண்டங்களும் ஒன்றுக்கொன்று சமம் எனலாம். இவற்றை பரிமாறிகொள்ளும் போது பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன எனவே எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு பண்டம் தேவைப்பட்டது.
அதாவது 1புத்தகம் = 2பேனா = அரை கிராம் தங்கம் (உதாரணத்திற்கு) என்றால் இங்கு அரைகிராம் தங்கம் பணமாக கொள்ளப்படுகிறது.
இது நாமாக ஏற்படுத்திகொண்ட அமைப்புதானே ஒழிய தங்கம் தான் பணமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
எதையெதையோ வைத்துப் பார்த்து இறுதியாக தங்கத்தை பணமாக வைத்தார்கள் நம் முன்னோர்கள்.
எனவே பணம் என்பது பண்ட பரிமாற்றத்திற்கான ஒரு விசேஷ பண்டம்தானே ஒழிய வேறில்லை.
பணம் என்பது முதலாளித்துவ சமுதாயத்தில் தோன்றிய பண்டம் அல்ல, பணம் அடிமை சமுதாயத்திலேயே தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.
இந்த பணம்தான் முதலாளித்துவ சமூதாயத்தில் எப்படி மூலதனமாகி ஆட்டிப் படைக்கிறது என்று இனிமேல் பார்க்க இருக்கிறோம். ”
சரியாத்தான் சொல்லியருக்காரு.
சரி கிளம்பறேன், நானும் நோ்ட்டு மாத்தணும்.”