டெல்லி :

டனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா, ஊரடங்கால் கடன் தொகையை கட்ட கால அவகாசம் வழங்கியதால் வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆர்.பி.ஐ. கூறியது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இது குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முழுநாடும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் போது, வங்கிகளின் பொருளாதாரத்தை பற்றி கவலைப்படவேண்டிய நேரம் இதுவல்ல என்று கூறியிருக்கிறது.

ஆகஸ்ட் 31 வரை நீடிக்கப்பட்டுள்ள கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்தால் கடன் வழங்கும் வங்கிகளுக்கு சுமார் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று தனது மனுவில் ஆர்.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான செய்திகளை ஊடங்களுக்கு கசியவிட்டு ஆர்.பி.ஐ. பரபரப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்றும் உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியிருக்கிறது .

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.