‘நேர்கொண்ட பார்வை’ படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருக்கிறார். அஜித்தின் அடுத்தப் படத்தையும் அவரே தயாரிக்க போவதாய் திட்டமிட்டுள்ளார் .

‘நேர்கொண்ட பார்வை’ வரும் ஆகஸ் 10 ஆம் தேதி வெளியிடப்படுவதாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் மீது காவல் நிலையத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரவீன் ஷ்யாம் என்பவர் ஜெய்ப்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், தன்னிடம் ரூ.2.5 கோடி கடனாக பெற்றுக்கொண்டு அதை இதுவரை திருப்பி தரவில்லை, என்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரால் அவர் தயாரித்திருக்கும் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு சிக்கல் எழும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.