இந்திய கடற்படையின் கோழிக்கோடு பகுதியில் கேப்டனாக இருந்த குங்காலி மரக்காரின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு தயாரான படம்- மரக்கார்- அரபிக்கடலிண்டே சிம்ஹம்.
பிரியதர்ஷன் இயக்கிய இந்த படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் மது, மஞ்சு வாரியார், சுனில் ஷெட்டி ஆகியோருடன் 4 பிரிட்டிஷ் நடிகர்களும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் இந்தியாவில் சிறந்த படம் என்ற தேசிய விருதை பெற்றுள்ளது.
இதையடுத்து மோகன்லால், படக்குழுவினருக்கு விருந்து அளித்தார்.
படக்குழுவினருடன் அவர் கேக் வெட்டி கொண்டாடினார்.
இது தொடர்பான போட்டோக்களை தனது வலைத்தளத்தில் மோகன்லால் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் பிரியதர்ஷன் வெளியிட்ட அறிக்கையில் “இது எனக்கு கிடைத்த விருது அல்ல ஒட்டு மொத்த டீமுக்கு கிடைத்த விருது” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அவர் இயக்கிய காஞ்சிபுரம் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
– பா. பாரதி