மும்பை
ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் ராமர் கோவிலை கட்டியதால் மட்டும் ஒருவர் இந்துக்களின் தலைவராக முடியாது எனக் கூறி உள்ளார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு பல்லாண்டுகள் கழித்து அங்கு மீண்டும் ராமர் கோவில் கட்டப்பட்டது. இதை முன்னின்று நடத்தியவர் என பிரதமர் மோடிக்கு பாஜகவினர் தொடர்ந்து புகாழாரம் சூட்டி வருகின்றனர்.
நேற்று மகாராஷ்டிர மாநில தலைநக்ர் மும்பையில் விஷ்வகுரு பாரதம் என்னும் தலைப்பில் ஒரு நிகழ்வு நடந்தது. அந்த நிகக்ஷ்வில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
மோகன் பகவத் தனது உரையில்,
”மிகவும் பழமையான இந்து மதத்தின் அடையாளமாக ராமர் கோவில் உருவாக்கப்பட்டது என்பது சரிதான்.
ஆனால், ராமர் கோவிலை கட்டியதால் மட்டும் ஒருவர் இந்துக்களின் தலைவர் ஆகிவிட முடியாது.
தன்னை வெளிப்படுத்தாமல் தொடர்ந்து சேவை செய்பவர்கள் சேவை பெற தகுதியானவர்கள்.
மத சேவையை தொடர்ந்து செய்துகொண்டிருக்கும்போது நாம் தீவிரமாகவும், நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்பட மையப்பாதையையும் தேர்ந்தெடுக்கக்கூடாது”
என்று கூறியுள்ளார்.