இந்திய கிரிக்கெட் வர்ர், முகமது ஷமி ட்விட்டரில் தன் மகள் புகைப்படத்தை உருக்கமான வார்த்தைகளுடன் பதிந்துள்ளது பலரையும் நெகிழச்செய்துள்ளது. முகமது ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரின் மனைவி ஹாசின் குற்றம்சாட்டியதோடு, காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.
ஷமி பல பெண்களுடன் சாட் செய்ததை ஆதாரங்களுடன் ஹாசின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மேலும் ஷமி மற்றும் அவரின் குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே ஹாசின் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி, குடும்ப வன்முறை, வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு ஷமி மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதன் காரணமாகப் பி.சி.சி.ஐ ஷமியின் பெயரை ஒப்பந்த வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
தன் மனைவி முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள ஷமி, “எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியாகும் அனைத்து புகார்களையும் மறுக்கிறேன். இது எனது விளையாட்டு திறமையைக் குறைக்க நடக்கும் சதியாகும். இந்தப் பிரச்னையைப் பேசித் தீர்க்கலாம். நாங்கள் மீண்டும் சேர்வது எங்கள் குழந்தைக்கு நல்லது’ என்று தன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தன் மகளை மிஸ் செய்வதாக ட்விட்டரில் உருக்கமாகப் பதிவு “ஒன்றையும் எழுதியருக்கிறார். அந்தப் பதிவுக்கு அவரது ரசிகர்கள் பின்னூட்டங்களில் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம், ஷமி அனுதாபம் தேடும் முயற்சி இது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.