திரிபோலி

லெபனான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது கடாபியின் மகன் ஹன்னிவால் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அதிபராக இருந்த முகமது கடாபி சர்வாதிகாரியாகச் செயல்பட்டார்.  இவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து சொந்த ஊரான சிர்டேவில் புரட்சியாளர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

அப்போது சிரியா-லெபனான் எல்லையில் பிடிபட்ட அவரது மகன் ஹன்னிவால் லெபனான் சிறையில் அடைக்கப்பட்டார்.  முகமது கடாபியின் மகன் ஹன்னிவால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2015 ஆம் ஆண்டு முதல் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதனால் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஹன்னிவாலை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.