டில்லி:
பிரதமர் மோடி கடந்த வாரம் 5 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடிந்துக்கொண்டு கடந்த 21ந்தேதி இந்தியா திரும்பிய நிலையில், இன்று மாலை மீண்டும் வெளிநாடு பறக்கிறார்.
சீனாவில் நாளையும், நாளை மறுதினம் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள இன்று மாலை சீனா பயணமாகிறார்.
சீனாவில் நடைபெற இருக்கும் முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சீனா செல்கிறார். இந்த மாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளான சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் கலந்துகொள்கின்றன.
சீனா செல்லும் மோடி, அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார். இந்த முறைசாரா சந்திப்பு 1954 க்குப் பிறகு தற்போது மீண்டும் நடைபெற உள்ளது.
தற்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே டோக்லாம் பிரச்சினை மற்றும் எல்லை பிரச்சினைகள் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும், மோடியின் இந்த இரண்டு நாள் பயணத்தின் போது, இந்தியாவும் சீனாவுக்கும் இடையே எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.