உலகம் முழுவதும் நாளை (8ந்தேதி) பெண்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி அன்றயை தினம் தனது சமூக வலைதளங்களை SheInspiresUs honour என பெண்களுக்கு விட்டுக்கொடுப்பதாக அறிவித்திருந்தார்.
இதையொட்டி, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவரும், பருவநிலை மாற்றத்துக்கு எதிராக குரல்கொடுத்து வருபவரான 8 வயது சிறுமியான லிசிபிரியா கஞ்சுகத்தை, சமூக வலைதளத்தை நிர்வகிக்க பிரதமர் அலுவலகம் தொடர்பு கொண்டது.
ஆனால், அதை ஏற்க மறுத்துள்ளார் இந்த 8வயது சிறுமியான பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடி வருபவருமான மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சுகம்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் பெறுவது ஒரு மரியாதை என்றாலும், இது ஒரு கிரிம் போலானது, நீடிக்காது என்பதால், அதை ஏற்க விரும்பவில்லை என்று கூறி, பிரதமர் மோடியின் முகத்தில் கரியை பூசி உள்ளார்…
பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களான டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யுடியூப் சமூக வலைதளங்களில் தனது கருத்துகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் பதிவிட்டு வருகிறார். சர்வதேச மகளிர் தினத்தில் எனது சமூக வலைதள கணக்குகளை சாதனை பெண்களுக்காக ஒதுக்க உள்ளேன் என அறிவித்திருந்தார்.
“இந்த மகளிர்தினத்தன்று (மார்ச் 8 ), தனது வாழ்க்கை மற்றும் பணியின் மூலம் நமக்கு முன்மாதிரியாக விளங்கும் பெண்களுக்காக எனது சமூக வலைதளகணக்குகளை ஒதுக்க உள்ளேன். இது லட்சக்கணக்கான பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
அத்துடன், சாதனை பெண்களைப் பற்றிய கதையை,டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் #SheInspiresUs என்ற ஹேஷ்டேக்கில் பதிவிடலாம். வீடியோவாக பதிவு செய்து யுடியூபிலும் #SheInspiresUs என்றஹேஷ்டேக்கில் பதிவேற்றம் செய்யலாம். இதிலிருந்து தேர்வுசெய்யப்படும் பதிவுக்கு சொந்தக்காரர்கள் மோடியின் சமூக வலைதள கணக்குகளை ஒரு நாள் நிர்வகிக்கலாம்” என கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, அதற்கான தேடல் பணிகளை பிரதமர் அலுவலகம் தொடங்கியது. அப்போது மணிப்பூர் சிறுமி குறித்த தகவல்கள் பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கு சென்றது.
அதையமுடுத்து, பிரதமர் அலுவலகம் மணிப்பூரைச் சேர்ந்த பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராளியான சிறுமி கங்ஜுகத்தை தொடர்ந்து கொண்டு பேசியுள்ளது. ஆனால், மோடியின் கோரிக்கையை மணிப்பூரி காலநிலை மாற்ற ஆர்வலர் லிசிபிரியா கங்குஜாம் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்து உள்ளார்.
அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் பெறுவது ஒரு மரியாதை என்றாலும், தனது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றும், அதனால் தனக்கு மனவருத்தம் என்று கூறியிருப்பதோடு, சர்வதேச மகளிர் தினத்திற்கு முன்னதாக ஷீ இன்ஸ்பயர்ஸ் பிரச்சாரத்தில் இணைந்த பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை நிராகரித்து விட்டதாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார், அதில், “அன்புள்ள நரேந்திர மோடி ஜி, நீங்கள் என் குரலைக் கேட்கப் போவதில்லை என்றால் தயவுசெய்து என்னைக் கொண்டாட வேண்டாம். உங்கள் முன்முயற்சியின் கீழ் நாட்டின் ஊக்கமளிக்கும் பெண்களில் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி #SheInspiresU கள். பலமுறை யோசித்த பிறகு, இந்த மரியாதையை நிராகரிக்க முடிவு செய்தேன். ஜெய் ஹிந்த்! ”
“இது (பிரச்சாரம்) அவர்களுக்கு ஒரு நல்ல முன்முயற்சியாக இருக்கலாம், ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கருத்தில் கொண்டு, இது எதையும் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இது எங்கள் முகத்தில் ஒரு நியாயமான கிரீம் பயன்படுத்துவதைப் போல இருக்கும், இது உங்களை நீங்களே சுத்தம் செய்தவுடன் இனி இருக்காது, . “அதற்கு பதிலாக, அவர் (மோடி) என் குரலைக் கேட்க வேண்டும், எங்கள் தலைவர்கள் காலநிலை மாற்றத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.”
“எனது நிராகரிப்பு எனது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். எனது கவலைகளைப் பற்றி விவாதிக்க நான் அழைக்கப்படவில்லை அல்லது அழைக்கப்பட வில்லை. எங்கள் தலைவர்களும் அரசியல்வாதிகளும் ஒருபோதும் காலநிலை மாற்றத்தை ஒரு தீவிரமான பிரச்சினையாக கருதுவதில்லை, அதுவே சோகமான பகுதியாக இருக்கலாம்,
கார்பன் உமிழ்வு மற்றும் பிற பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்த ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும்,
பள்ளி பாடத்திட்டத்தில் காலநிலை மாற்றத்தை கட்டாய பாடமாக சேர்க்க வேண்டும்
இறுதித் தேர்வுகளை முடிக்கும் மாணவர்களால் குறைந்தபட்சம் 10 மரங்களை நடவு செய்ய வேண்டும்
என்று வலியுறுத்தி உள்ள சிறுமி, “மேற்கூறிய மூன்று கொள்கைகளும் மாற்றப்படக்கூடியவை, உலகின் பிற நாடுகளும் இதைப் பின்பற்றலாம். இது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும், உலக அமைப்பை மாற்றவும் உதவும், ”என்று அவர் கூறினார்.
ஜூலை 4, 2018 அன்று ஐ.நா. நிகழ்ச்சியில் மங்கோலியாவில் உலகத் தலைவர்களை உரையாற்றியதாக கங்குஜாம் கூறினார். பின்னர் உலகத் தலைவர்களை உடனடியாக காலநிலை நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார்.
மணிப்பூரி காலநிலை மாற்ற ஆர்வலர் லிசிபிரியா கங்குஜாம் (வயது 8) ஏற்கனவே பருவநிலை மாற்றங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டில், அவருக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் குழந்தைகள் விருது, உலக குழந்தைகள் அமைதி பரிசு, மற்றும் இந்தியா அமைதி பரிசு என பல விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு (2019) ஜூலை மாதம் பாராளுமன்றத்திற்கு வெளியே பருவநிலை மாற்றம் தொடர்பான போராட்டத்தில் கலந்துகொண்டு மத்தியஅரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறிப்பிடத்தக்கது.