ராஜஸ்தான் மாநிலத்தில் ஞாயிறன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொன்டு பேசிய மோடி இந்து முஸ்லீம் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பேசினார்.
இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை “அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றவர்கள்” என்றும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துக்களை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்க அக்கட்சியின் தேர்தல் அறிக்கை முன்மொழிகிறது என்றும் கூறினார்.
சொத்து சமத்துவமின்மையை நிவர்த்தி செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது என்று கூறிய மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (2006 ம் ஆண்டு) “நாட்டின் வளங்களில் முதல் உரிமை முஸ்லிம்களுக்கு தான்” என்று கூறியுள்ளதாகவும் பேசினார்.
நரேந்திர மோடியின் இஸ்லாமிய வெறுப்பு பேச்சு குறித்து சிங்கப்பூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளன!
ஒரு இந்திய பிரதமர் உலக அளவில் இத்தனை முறை கேவலப்படுவது இதுவே முதல்முறை..🤦♂️🤦♂️#NoVoteToBJP #Vote4INDIA pic.twitter.com/Uso6yJOhQ8
— ஜீரோ நானே⭕ (@Anti_CAA_23) April 23, 2024
நரேந்திர மோடியின் இந்த பேச்சு உண்மைக்கு புறம்பான திரித்தும் இணைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து நேரடியாக விவாதிக்க தயாரா என்று மோடிக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே சவால் விடுத்தார்.
Narendra Modi being a less Educated PM.🔥
-Brings another Shocker & shame for INDIA across Globe.
-Singapore
-US
-BBC
-Times
-New York times-Almost every Nation has covered his Hate Speech.
-More then 17k Indians wrote to ECI of same.
This man has lost the way.… pic.twitter.com/c3qzXsnEX6
— Manu🇮🇳🇮🇳 (@mshahi0024) April 23, 2024
இந்த நிலையில், மோடியின் இந்த வெறுப்பு பேச்சு உலகம் முழுவதும் பல்வேறு ஊடகங்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.