டில்லி,

டந்த ஆண்டு பண மதிப்பிழப்பை மத்திய அரசு அறிவித்தபிறகு, நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு நிலவியது. அதையடுத்து பணமற்ற பரிவர்த்தனை (Cashless transaction) செய்ய நாட்டு மக்களை வலியுறுத்தினார் மோடி. அதற்காக பரிசு திட்டங்களும் அறிவிக்கப்பட்டது.

இந்தியா, டிஜிட்டில் இந்தியாவா மாற அனைவரும் பணமற்ற பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது மத்திய அரசு.

ஆனால்,  வங்கிகள் மற்றும் வாலெட்டுகள் பணி பரிமாற்றம் செய்ய கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த மோடி அரசு எந்தவித முயற்சியும் செய்யவில்லை.

வரும் ஏப்ரல் மாதம் முதல் 4 பரிவர்த்தனைக்கு மேல் வங்கிகளில் பணம் எடுத்தாலோ, மற்ற வர்களுக்கு அனுப்பினோலோ, பேலன்ஸ் பார்த்தாலோ பணம் வசூலிக்கப்படும் என வங்கிகள் அறிவித்துள்ள நிலையில்,

தற்போது பேடிஎம் எனப்படும் வாலெட் நிறுவனமும் பணம் வைப்புதொகையாக சேமித்து வைக்க 2 சதவிகிதம் கட்டணத்தை அறிவித்து உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேடிஎம் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது என்று, தெருத்தெருவாக, சிறு கடைகள் முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை அனைத்து இடங்களில் அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை தனது மாய வலைக்குள் வீழ்த்தியது பேடிஎம் நிறுவனம்.

அதன் காரணமாக ஏராளமானோர் பேடிஎம் மூலம் பொருட்கள் வாங்க முற்பட்டனர். ஆனால், தற்போது அவர்களுக்கு ஆப்பு வைத்துள்ளது பேடிஎம் நிறுவனம்.

தற்போது பணப்புழக்கம்  ஓரளவுக்கு சீரடைந்து வந்துள்ள நிலையில், Paytm-ல் பணம் சேமித்து வைக்கவும் 2% வைப்பு கட்டணம் வசூலிக்கும் என்று அறிவித்து உள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு  உபயோகப்படுத்தப்பட்டு வரும் நிறுவனமான Paytm, 2% வைப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட கட்டமில்லா சேவையை பலர் தவறாக உபயோகப்படுத்துவதாலும், பேடிஎம் மூலம் கிடைக்கும் சலுகைகள் மூலம் பணம் சம்பா திப்பதையே இலக்காக கொண்டுள்ளனர் என்று பேடிஎம்  நிறுவனர் விஜய் ஷேகர் ஷர்மா கூறிஉள்ளார்.

பேடிஎம் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலவசம் என்று அறிவித்ததால்தான் சிறுகுறு பயனாளிகள் அதை உபயோகப்படுத்தி வந்தனர். தற்போது 2% கட்டணம் அறிவித்திருப்பதால், பொதுமக்கள் ஏராளமானோர் பேடிஎம் வசதியில் இருந்து வெளியேற தொடங்கி உள்ளனர்.

மத்திய அரசு நாடு வளம்பெற, மேக் இன் இந்தியா,  டிஜிட்டல் இந்தியா… என கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால், ஒவ்வொரு திட்டத்தின் மூலமும் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பிடுங்கவே பயன்படுத்தி வருகிறது என்றும், அவரது டிஜிட்டல் இந்தியா திட்டம் ஒரு தோல்வியான திட்டம் என்றும் பொது மக்கள் மட்டுமல்லாது அனைத்து கட்சியினரும் கூறி வருகின்றனர்.

பொருளாதார வளர்ச்சி, கறுப்புப்பணம் கைப்பற்றப்படும், ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கு ளிலும் ரூ.15 லட்சம் அளிக்கப்படும் , சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கங்கை நதி சுத்தம் செய்தல், இலங்கை  பிரச்சினை போன்றவை குறித்து மோடி அரசு கூறிய எந்த வாக்குறுதியும் நிறை வேற்றப்படவில்லை… மேலும் இந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வியையே சந்தித்து வருகின்றன.

மொத்தத்தில் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா….’  மக்களிடம் இருந்து  பணத்தை பிடுங்குவதிலேயே குறியாக இருப்பது தற்போதைய நடவடிக்கைகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது.