டில்லி

மோடி பதவி ஏற்ற தினமான மே 26ஆம் தேதியை காங்கிரஸ் கட்சி துரோக தினமாக நாடெங்கும் கொண்டாட உள்ளது.

வரும் 26ஆம் தேதியுடன் மோடி பிரதமராக பதவி ஏற்று நான்கு வருடங்கள் முடிகிறது.   இது குறித்து பாஜக பல கொண்டாட்டங்கள் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.   அதே நேரத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு பாஜகவின் நடவடிக்கைகள் கடும் அதிருப்தியை அளித்து வருகின்றன.   நேற்று காங்கிரஸ் சார்பில் இந்தியாவுக்கு துரோகம் இழைக்கப்பட்டது என்னும் பதாகைகளும் சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டன.

இந்த விழாவில் கலந்துக் கொட காங்கிரஸ் தலைவர் அசோக் கெகலாத், “மோடி அரசு பதவி ஏற்கும் முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல் அனத்து மக்களுக்கும் துரோகம் இழைத்து விட்டது.   விவசாயிகளுக்கு அதிக விலை, வருடத்துக்கு 2 கோடி புதிய வேலை வாய்ப்புக்கள் போன்ற பல வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றப் படவில்லை.    பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடும் உயர்வு, தலித் மக்கள், சிறுபான்மையினர் மீது கடும் தாக்குதல் ஆகியவை நாட்டில்  பெருகி வருகிறது.

இதனால் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையும் நேரம் வந்துள்ளது.    மோடியின் நடவடிக்கைகளை  நிறுத்த இது ஒன்றே சரியான வழி ஆகும்.    நான் மோடிக்கு ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன்.  தயவு செய்து பொய்களை கூறுவதை நிறுத்துங்கள்.   இதனால் நீங்கள் வகிக்கும் பிரதமர் பதவிக்கு மரியாதைக் குறைவு உண்டாகிறது.   இது அயல்நாட்டினரிடையே நம் நாட்டின் மதிப்பை குறைத்து விடும்.   இதனால் நாட்டுக்கே அவமானம் ஆகும்.

மோடி இதுவரை உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்றுள்ளார்.  ஆனால் அதற்கான பலன் எவ்வளவு என்றால் பூஜ்யம் தான்.  எனவே இனி அவர் வெளிநாடுகள் செல்வதை நிறுத்தி விடலாம்.   நாட்டில் அனைவரையும் ஏமாற்றிய மோடி பதவி ஏற்ற நான்காம் வருட தினம் மே 26 ஆம் தேதி வருகிறது.   அன்றைய தினத்தை காங்கிரஸ் கட்சி நாடெங்கும் துரோக தினமாக கொண்டாட உள்ளது” என தெரிவித்துள்ளார்.