டெல்லி:
டெல்லி வந்துள்ள மணிப்பூர் ஈரோம் ஷர்மிளா பிரதமரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யக்கோரி மணிப்பூரில் 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வந்த இரோம் ஷர்மிளா 9-ம் தேதி உண்ணாவிரதத்தை முடித்ததை தொடர்ந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
16 ஆண்டுகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பின்னர் அரசியலில் குதித்துள்ள இரோம் ஷர்மிளா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அறிவுரைப்பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மாநில மக்கள் உரிமையை நிலைநாட்ட வர இருக்கிற சட்டசபை தேர்தலில் முதல்வர் பதவிக்கு போட்டியிடப்போவதாகவும் அறிவித்து உள்ளார்.
மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராகிவரும் ஷர்மிளா, கடந்த மாதம் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து அரசியல் தொடர்பாக ஆலோசனைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழக மாணவரிடையே கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய இரோம் ஷர்மிளா,
பிரதமர் மோடியை விரைவில் சந்தித்து அரசியல் தொடர்பாக அவரது ஆலோசனையை பெற விரும்புவதாகவும், நல்ல அறிவிரைகளை எப்போதும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
மேரலும், அறிவுரையை தருபவர்கள் நமது எதிரியாக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அவரிடம் சில நல்ல அபிப்ராயங்கள் இருந்து அவற்றை என்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால் நிச்சயமாக அதை நான் ஏற்றுக்கொள்வேன்’ என குறிப்பிட்டார்.