தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். சென்னை வரும் மோடி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை வரும் முன்பு பிரதமர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இதற்காக பெங்களூர் வரும் பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் ஓசூர் செல்கிறார்.அந்திவாடி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில் அவர் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்புக்காக 8,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.