டில்லி:
எதிர்கட்சிகளை அச்சுறுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு சிபிஐ.யை பயன்படுத்துகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘ எதிர்கட்சிகளை அச்சுறுத்தவும், தொந்தரவு செய்யவும் சி.பி.ஐ.யை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தற்போது லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைக்கு பிரதமர் மோடியின் அடுத்த இலக்கு யார்? என்பதை தெரியபடுத்த வேண்டும். ரபேல் போர் விமானம் வாங்க கூடுதலாக ரூ.1000 கோடி கொடுத்துள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.