ராமண்ணா வியூவ்ஸ்:
அவ்வப்போது அலைபேசுபவர்தான் வழக்கறிஞர் அருள் துமிலன். சிறந்த சட்டத்துறையில் மட்டுமல்ல. பொது விசயங்களிலும் மிக நுண்ணிய பாயிண்ட்டுகளை சொல்வார்.
அப்படி அவர் இன்று சொன்னது:
“மன்மோகன் சிங் செயல்படாத பிரதமர் என்று பாஜக தொடர்ந்து சொல்லி வருகிறது.
ஆனால் மன்மோகன் சிங், பிரதமராக இருந்தபோது, இலங்கை கடற்படை நமது மீனவர்களை பிடித்துச் செல்லும். இந்தியா சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களும், படகுகளும் விடுவிக்கப்படுவது நடக்கும்.
இப்போது, “வலிமையான பிரதமர்” மோடி ஆட்சியிலும் இலங்கை கடற்படை நமது மீனவர்களை பிடித்துச் செல்கிறது. சரி, வழக்கமாக நடப்பதுதான் என்று விட்டுவிடுவோம்.
ஆனால் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, திரும்ப மீனவர்கள் மட்டுமே அழைத்து வரப்படுகிறார்கள். படகுகள் இலங்கையிலேயே தங்கி விடுகின்றன.
அப்புறம் என்ன இவர் வலிமையான பிரதமர்?” என்று கொக்கி போட்டார் அருள்துமிலன்.
அடுத்து அவர் சொன்ன இன்னொரு பாயிண்ட், உண்மையிலேயே டெரரான மேட்டர்தான்.
“சென்னை மற்றும் கன்னியா குமரி கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி, “தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் பிரேம் என்பவர் ஆப்கனில் தலிபான் தீவிரவாதிகளால் ஒன்பது மாதங்களில் சிறை வைக்கப்பட்டிருந்தார். அவரை இரண்டரை மணி நேரத்தில் பேசி விடுதலை செய்து இந்தியா கொண்டு வந்தேன்” என்றார்.
பிடித்துவைத்திருந்தது ஆப்கன் அரசாக இருந்தால், அந்த அரசுடன் பேசலாம். ஆனால் பாதிரியாரை பிடித்துவைத்திருந்தது அங்கிருக்கும் தலிபான் பயங்கரவாதிகள். அப்படியானால் மோடி, தலிபான் பயங்கரவாதிகளிடம் பேச்சு நடத்தி பாதிரியாரை விடுவித்தாரா? அப்படியானால் அது குறித்து விவரம் தெரிவிக்க மோடியோ, பாஜகவோ தயாரா?” – வழக்கறிஞர் அருள் துமிலன் கேட்க… எனக்கு பதில் சொல்லத் தோன்றவே இல்லை.
யாரேனும் பாஜகவினர் பதில் சொன்னால் சரி!
பின்குறிப்பு: அருள்துமிலன், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை ஏனோ விரும்புவதில்லை. ஆகவே அவரது பாஸ்போர்ட் படம்.