டில்லி,
பாராளுமன்ற விவாதத்தில் மோடி பங்கேற்க வேண்டும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வற்புறுத்தி உள்ளார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் ஆரம்பமானது. ஆனால் இதுவரை எந்த விவாதமும் இன்றி எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டே வருகிறது.
ரூபாய் நோட்டு வாபஸ் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பதிலளிப்பதை எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் பார்லிமென்ட் வரும் போது எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துக்களை தெளிவாக தெரிவிக்கும். இதன் மூலம் அனைத்து பிரச்னைகளும் தெளிவாகும் என்றார்ல.
பார்லிமென்டிற்கு வெளியே பிரதமர் சிரிக்கிறார். பின்னர் அழுகிறார். அவர் பார்லிமென்டிற்கு வந்தால், அவர் புதிதாக வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை நாம் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், பிரதமர் மோடி பார்லி மெண்ட்டுக்கு வருவதில்லை.
அதேபோன்று, ராஜ்யசபாவுக்கு வந்த பிரதமர் மோடி, கடந்த 8ம் தேதி ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக நடந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை.
பார்லிமென்டில் பேச பிரதமர் பயப்படுவது ஏன்? பார்லிமென்ட் தவிர மற்ற இடங்களில் பிரதமர் பேசுகிறார், ஆனால், பார்லிமெண்டில் மட்டும் பிரதமர் பேசுவதில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel