டில்லி

நேற்று நடந்த அமைச்சரவையின் இறுதிக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் இனி அவரவர் தொகுதிகளில் தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என பிரதமர் கூறி உள்ளார்.

பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது.   அனைத்துக் கட்சிகளும் வரவுள்ள மக்களவை தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.    பாஜகவை ஆட்சியை விட்டு நீக்க எதிர்கட்சிகள் முயன்று வருகின்றன.   பாஜக தனது ஆட்சியை மீண்டும் அமைக்க பாடுபட்டு வருகிறது.

தற்போதுள்ள பாஜகவின் மத்திய அமைச்சரவையின் இந்த காலகட்டத்துக்கான இறுதிக் கூட்டம் நேற்று  பிரதமர் மோடியின் தலைமையில் நடந்தது.   அந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைத்து அமைச்சர்கள் இடையே பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார்.

அப்போது பிரதம்ர் மோடி, “தற்போது அமைச்சரவையின் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில் உள்ளது.  நாளை முதல் அனைத்து அமைச்சர்களும் அவரவர் தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பணியில் தங்கள் நேரத்தை செலவிட வேண்டும்” எனக் கூறி உள்ளார்.

இந்த வார இறுதியில் பல திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.   அரசு தற்போது தேர்தல் வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ள்து.   அனேகமாக இந்த மாதம் 5 அல்லது 6 ஆம் தேதி வாக்கில் தேர்தல் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Thanx ; INDIA TODAY