மணிலா:
இன்று பிரமதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப்பை சந்தித்து பேசினார்.
ஆசியான் நாடுகளின் மாநாட்டுக்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிலிப்பைன்ஸ் நாட்டு தலைநகர் மணிலா சென்றடைந்தார் பிரதமர் மோடி. அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மணிலாவில் நடைபெறும் ஆசியான் நாடுகளின் ஐம்பதாவது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் மோடி, அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற இருக்கிறார். ஆசியான் – இந்தியா மற்றும் கிழக்காசிய நாடுகளின் மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.
இன்று ஆசியான் நாடுகளின் 50-வது ஆண்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அந்த விருந்தின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்மதேவ், சீன பிரதமர் லீ கியாங், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
மேலும் பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ட்ரம்பை நாளை அதிகாரப்பூர்வமாகச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச இருக்கிறார்.