
டில்லி
உன்னாவ் மற்றும் கத்துவாவில் நடைபெற்ற பலாத்கார நிகழ்வுகளைப் பற்றி இதுவரை மோடி ஒன்றும் சொல்லாலததை ஊடகங்கள் கிண்டல் செய்கின்றன.
உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் ஒரு 18 வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் குல்தீப் சிங்கின் சகோதரர் தாக்கியதில் அந்தப் பென்ணின் தந்தை மரணம் அடைந்துள்ளார். குல்தீப் சிங் மற்றும் அவர் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் இந்துக்கள் சிலர் ஒரு எட்டு வயது சிறுமியை மயக்க மருந்து கொடுத்து பல முறை பலாத்காரம் செய்து கொன்றுள்ளனர். அந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை அளித்து வழக்கு பதிவு செய்ய அங்குள்ள பாஜக ஆதரவு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை டில்லியில் நடத்தினார். அதில் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இது குறித்து பிரதமர் மோடி ஒன்றுமே கூறாததை ஊடகங்கள் கிண்டல் செய்துள்ளனர். மோடி வாஇயை மோடி இருக்கும் ஒரு படத்தை வெளியிட்டு, ”பிரதமர் மோடி உன்னாவ் மற்றும் கத்துவா பலாத்காரங்களைப் பற்றி தெரிவித்தது இதுதான் என குறிப்பிட்டுள்ளன. மேலும் அதன் கிழே “அவர் உண்மையாகவே இதுகுறித்து பேசும் போது செய்தி அப்டேட் செய்யப்படும்” என குறிப்பிடப் பட்டுள்ளது
[youtube-feed feed=1]