டெல்லி
அரசு பணத்தை கோடிக் கணக்கில் செல்வழித்து பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் சென்ற வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.
மத்திய வெளியுறவு இணை அமைசர் பபித்ரா மார்கெரிட்டா இதற்கு நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கடந்த 2022 மே முதல் 2024 டிசம்பர் வரை பிரதமர் மேற்கொண்ட 38 வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வழங்கினார்.
இந்த 3 ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட பயணங்களுக்கான மொத்த செலவு சுமார் ரூ.258 கோடி என அவர் தெரிவித்தார். இவற்றில் முக்கியமாக, 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதற்கான செலவு ரூ.22.89 கோடி என கூறப்பட்டு இருந்தது.
கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றபோது ரூ.15.33 கோடி செலவாகி இருக்கிறது.முன்னதாக 2023-ல் ஜப்பான் பயணத்துக்கு ரூ.17.19 கோடியும், 2022-ல் நேபாள பயணத்துக்கு ரூ.80 கோடியும் செலவிடப்பட்டு உள்ளது.