ராய்ப்பூர்

ந்திய வீரர் போர்கைதியாக சிக்கி உள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடியும் உள்துரை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சத்தீஸ்கர் மாநில தேர்தல் பணியில் உள்ளனர்.

கடந்த 14 ஆம் தேதி புல்வாமா மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ் ஈ முகமது தற்கொலைப்படை தாக்குதலை நிகழ்த்தியது. அந்த இயக்கம் மேலும் பல தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு காஷ்மீர் எல்லைப் பகுதியில் முகாமிட்டது. நேற்று எல்லை தாண்டி சென்ற இந்திய விமானங்கள் அந்த முகாம்கலை குண்டு வீசி அடியோடு அழித்தன.

அதை ஒட்டி இன்று பாகிஸ்தான் விமானப்படை எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தியது. எதிர் தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு அந்த விமானத்தை செலுத்திய விங் கமாண்டர் அபிநந்தன் போர்க்கைதியாக பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்தியா முழுவதும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை அபிநந்தன் குறித்த விவரம் அறியாமல் அனைவரும் கலக்கத்தில் ஆழ்ந்திருந்த போது கேலோ இந்தியா என்னும் செயலியை வெளியிடும் நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளார். இந்த நிகழ்வின் வீடியோவை தூர்தர்ஷன் வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி அதற்கு பிறகு மோடி மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் அபிநந்தன் சிறைக்கைதியாக பிடிபட்டது குறித்து உள்துறை அமைச்சகம் அறிவித்த போது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சத்தீஸ்கர் மாநில பாஜக தொண்டர்கஉடன் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தார். அத்துடன் அதே மாநிலத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரசார பணிகளில் மோடி மும்முரமாக இருந்துள்ளார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.