ஜெனிவா
ஜெனிவாவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி பிரதமர் மோடிக்கு அதிக அளவில் பின் தொடர்பவர்கள் உள்ளதால் அவர் முதல் இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
முகநூல் மூலம் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து ஆதாரவாளர்களை தொடர்பு கொள்கின்றனர். இதில் பல நாட்டு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர்கள் என பலர் உள்ளனர். இவர்களுக்கு கோடிக்கணக்கில் பின் தொடர்வோர் (FOLLOWERS) உள்ளனர். ஜெனிவா வை செர்ந்த பர்சன் கோன் அண்ட் வொல்ப் நிறுவனம் முகநூலில் அதிகம் பின் தொடர்வோர் உள்ள தலைவர்கள் பற்றி ஆய்வு நடத்தியது.
அனைத்து நாட்டு தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட 650 கணக்குகள் இந்த அய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில் பிரதமர் மோடி 4.32 கோடி பின் தொடர்பவர்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 2.31 கோடி பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பிரதமர் மோடிக்கு அதிகம் பின் தொடர்வோர் இருந்த போதிலும் அவருடைய பதிவுகளுக்கு பின்னூட்டம் கம்மியாகவே கிடைக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் பதிவுகளுக்கு 20.49 பின்னூட்டங்கள் கிடைத்துள்ளன. மோடியின் பதிவுகளுக்கு 11.3 கோடி பின்னூட்டம் மட்டுமே கிடைத்துள்ளன.