டில்லி

மோடி அரசின் தோல்விகள் மற்றும் அகங்காரமே விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை அதிகரிப்பு காரணம் என ராகுல் காந்தி கூறி உள்ளார்.

நாட்டில் நிலவும் பணவீக்கம் வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைக்கு மத்திய மோடி அரசே காரணம் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது.   அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை ஆகியவற்றையும் வலியுறுத்தி வருகிறார்.

இன்று ராகுல் கந்தி தனது டிவிட்டரில், “வேலையின்மை அதிகரிப்பு, பணவீக்கம், வேளாண் சிக்கல்கள், சீனாவின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்கு வேராக இருப்பது அனைத்தும் ஒன்றே  ஒன்றுதான். அதவது மோடி அரசின் தோல்விகள், அகங்காரம், நண்பர்கள் மீதான அன்புதான் இவற்றுக்குக் காரணம்.

நாம் அநீதிக்கு எதிராக அனைவரும் சேர்ந்து ஒருசேரக் குரல் எழுப்புவோம். நாங்கள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகிறோம். அந்த அரசுகள் மக்களின் எண்ணங்களை, குரல்களைக் காது கொடுத்துக் கேட்கின்றன.  அதே வேளையில் மோடி அரசு மக்களின் எந்தப் பிரச்சினைகளை தீர்க்கவில்லை” எனப் பதிந்துள்ளார்.