டில்லி,

மாடுகளுக்கும் ஆதார் போல அடையாள அட்டை வழங்க மத்தியஅரசு  148 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறப்பட்டுகிறது.

நாட்டு மக்களுக்கு, அவர்களின் கை விரல் மற்றம் கருவிழி பதிவுகளை கொண்டு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூமே இனி வருங்காலம் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் நிலை உருவாகி வருகிறது.

இதுபோல அடையாள அட்டை மாடுகளுக்கும் வழங்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை போன்று பசு மற்றும் எருமை மாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.148 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது சுமார் 8.8 கோடி எருமை மற்றும் பசு மாடுகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையிலும், எருமை மற்றும் பசு மாடுகளின் சுகாதாரத்தை  கருத்தில் கொண்டும், அவைகளின் விவரங்கள் அடங்கிய அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய விலங்குகள் நலத்துறை அறிவித்து உள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கும் என்று கூறி உள்ளது.

இந்த கார்டில், மாடுகளின் உரிமை யாளர், அவரது முகவரி, மாடுகளின் இனம், இனப்பெருக்கம் உள்ளிட்ட விவ ரங்கள் இடபெறும். ஆதார் அடையாள அட்டையில் உள்ளதை போன்று 12 இலக்க எண்கள் இந்த அட்டையிலும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு அட்டை தயாரிக்க 8 ரூபாய் செலவிடப்படுகிறது. இது, 8 கிராம் எடை கொண்டதாக இருக்கும். மேலும், மாடுகளின் காதுகளின் உட்புறம் இதற்கான அடையாளம் பொறிக்கப் படும். அடையாள அட்டைக்கான விவரங்கள் சேகரிப்பு, தயாரிப்பு பணியில் சுமார் 1 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அனைத்து மாநிலங்களிலும் எருமை, மாடுகளுக்கான அடையாள அட்டைகளை வழங்கும் பணியை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மனிதனுக்கே இன்னும் ஆதார் கார்டு சரிவர வழங்கப்படாமல் இருக்கும் நிலையில்,  மாடுகளுக்கு ஆதார் கார்டா….? இந்தியா எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது…..