டில்லி
பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாதம் தை முதல் நாள் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டில் கொண்டாடு வருகின்றனர். தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகையாக பொங்கல் திகழ்கிறது. இந்தப் பண்டிகை உழவர் திருநாள் எனவும் வழங்கப் படுகிறது. அறுவடையான புது அரிசியைக் கொண்டு பொங்கல் செய்து இன்று உழவருக்கு முக்கிய துணையான சூரியனுக்கு படைப்பது வழக்கம்.
இந்த பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிச்சாமி உட்பட பல தலைவர்கள் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் பொங்கல் வாழ்த்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துளார்.
அந்த வாழ்த்துச் செய்தியை அவர் தமிழில் பதிந்துள்ளார். அதில் அவர், “தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இத்திருநாள் அனைவர் வழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கட்டும். நரேந்திர மோடி” என பதிந்துள்ளார்.