அகமதாபாத்
சபர்மதி ஆசிரமத்தில் நடந்த கூட்டத்தில் பசுவின் பெயரால் மனிதனைக் கொல்வதை யாராலும் ஒப்புக் கொள்ள முடியாது என மோடி தெரிவித்தார்.
சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் அகமதாபாதில் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு மோடி உரையாற்றினார். அப்போது அவர் மாட்டுக்காக மனிதனைக் கொல்வதைப் பற்றிக் கூறியதாவது :
”பசுவின் பெயரைச் சொல்லி, அதைக் காப்பாற்றுகிறோம் என்னும் காரணத்தை சொல்லி மனிதனைக் கொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது, சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. நமது நாடு அகிம்சையை ஏற்றுக் கொள்ளும் நாடு. இங்கு வன்முறை கூடாது. இத்தகைய ஒரு வன்முறையை மகாத்மா காந்தியும் விரும்ப மாட்டார்” எனக் கூறினார்