டில்லி
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைத்துள்ளதாகப் பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.

வெகுநாட்களாக நிலுவையில் இருந்த அயோத்தி ராமர் கோவில் வழக்கு கடந்த வருடம் முடிவுக்கு வந்தது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் அமைக்க உச்சநீதிமன்றம் அரசுக்கு அனுமதி அளித்தது. அத்துடன் மசூதி அமைக்க உத்தரப் பிரதேச அரசு வக்ஃப் வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, ”அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவிலைக் கட்டப்பட உள்ளது, அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்துள்ளது. இந்த கோவிலைக் கட்ட ராம ஜென்ம பூமி அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த அறக்கட்டளையில் ஒரு தலித் உள்ளிட்ட 15 அறங்காவலர்கள் உள்ளனர்.
கோவில் கட்டுவது குறித்து இந்த அறக்கட்டளை சுதந்திரமாக முடிவு எடுக்கும். விரைவில் அயோத்தியில் 67.7 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டப்பட்ட உள்ளது. அத்துடன் உத்தரப் பிரதேச அரசு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சன்னி வக்ஃப் வாரியத்துக்கு மசூதி அமைக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது” என அறிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]