டெல்லி

டொனால்ட் டிரம் மீது துப்பாக்கி சூடு நடந்ததற்கு, பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்

ഡോണൾഡ് ട്രംപ്, ബറാക് ഒബാമ, നരേന്ദ്ര മോദി, രാഹുൽ ഗാന്ധി

வரும் நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். டொனால்டு டிரம்ப் பேசும் போது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்.

டொனால்ட் டிரம்ப் காதில் இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ரத்த காயம் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக  டிரம்ப்பை சுற்றி பாதுகாப்பு அரணாக மாறினர். ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். பாதுகாப்பு படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

டொனால்டு டிரம்புக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த  சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொனால்டு டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்

“எனது நண்பரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து அறிந்து ஆழ்ந்த கவலையடைந்தேன். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் உள்ளன”

என்று பதிவிட்டுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி எம்.பி, தனது எக்ஸ் வலைதளத்தில்,

“அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான படுகொலை முயற்சியால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். இத்தகைய செயல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்”

என்ற பதிவிட்டுள்ளார்.