டில்லி

ப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் குறித்து இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் தொலைப்பேசியில் உரையாடி உள்ளனர்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதால் அந்நாட்டில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.   ஆப்கான் நாட்டு மக்கள் வேறு நாட்டுக்குத் தப்பி ஓட காபூல் விமான நிலையத்தில் குவியும் காட்சிகள் வெளியாகி உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நிலை குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.  அனைத்து நாடுகளும் ஆப்கானில் சிக்கி உள்ள தங்கள் நாட்டவரை பத்திரமாக மீட்க விமானங்களை அனுப்பி வருகின்றான்.  இந்தியாவும் விமானங்களை அனுப்பி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது

இன்று இந்தியப் பிரதமர் மோடி ஆப்கான் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதின் உடன் தொலைபெசி மூலம் உரையாடி உள்ளார். தவிர கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போரிடுவது குறித்தும் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.  இரு நாடுகளும் உலகில் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் கலந்தாலோசிக்க உள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.