டெல்லி: பிரதமர் மோடி 3வது முறையாக நாட்டின் பிரதமராக நாளை (ஜுன் 9ந்தேதி – ஞாயிற்றுக்கிமை) இரவு பதவி ஏற்கிறார் என குடியரசு தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ மாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் முடிந்த பின் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.  அவருடன் சந்திரபாபு நாயுடு, நிதீஷ், ஷிண்டே உடன் சென்றனர்.  அப்போது மோடியை ஆட்சி அமைக்குமாறு மோடிக்கு முர்மு அழைப்பு விடுத்தார். அப்போது,  அவரிடம், இன்று அமைச்சர்கள் பட்டியல் தருவதாக மோடி தெரிவித்தார். ஞாயிறு பதவி ஏற்க சம்மதம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து,  நாளை இரவு 7:15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

பின்னர், ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் பேட்டி அளித்த மோடி, ”தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. கூடுதல் உற்சாகத்துடன் பணியாற்றுவோம். நிலையான, வலுவான ஆட்சியை தருவோம். புதிய சரித்திரத்தை எழுதுவோம்,” என்றார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை   (ஜூன்9) இரவு 7.15 மணிக்கு 3ஆவது முறை பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி. அவருக்கும்,   புதிய அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்  என  குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

முன்னதாக  தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள், கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கே  மேடை அமைத்து, அதில் அரசியலமைப்பு சட்டத்தின் மிகப்பெரிய புத்தகம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த  அந்த புத்தகத்தை எடுத்து சில வினாடிகள் தன் நெற்றியில் வைத்து வணங்கி விட்டு, அதன்பிறகே தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தார் பிரதமர் மோடி.

பின்னர் ஏற்புரை ஆற்றிய பிரதமர் மோடி,  சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை உயர்த்த தே.ஜ., கூட்டணி அரசு அடுத்த 10 ஆண்டுகளில் கவனம் செலுத்தும். பரஸ்பர நம்பிக்கை என்பதே கூட்டணியின் மையப்புள்ளி. அனைவரும் சமம் என்ற கொள்கையுடன் செயல்படுவோம். கூட்டணி வரலாற்றில், எண்ணிக்கை அடிப்படையில் இதுதான் பலம் வாய்ந்த கூட்டணி அரசு. இது எப்போதும் தோற்காது. எங்கள் வெற்றியை ஏற்காமல், அதன் மீது தோல்வியின் நிழலை போர்த்த முயற்சி செய்தனர்; அது பலன் அளிக்கவில்லை.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றிக்காக உழைத்த தொண்டர்களுக்கு சல்யூட்.

தேர்தலுக்காக திரண்டது இண்டியா கூட்டணி. அதன் தலைவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். இது அவர்களின் பதவி ஆசையை வெளிப்படுத்தியது. ‘மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் உயிருடன் உள்ளதா’ என கேட்டனர். ஆனால், ஜூன் 4ல் அமைதியாகி விட்டனர். இந்திய ஜனநாயகம், அவர்களை அமைதியாக்கி விட்டது.

கடந்த மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் ஜெயித்த மொத்த தொகுதிகளை காட்டிலும், இந்த ஒரு தேர்தலில் பா.ஜ., பெற்ற தொகுதிகள் அதிகம். இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் 100 தொகுதிகளை காங்கிரசால் எட்ட முடியாது. அவர்களை போல பதவிக்காக சேர்ந்தது அல்ல தே.ஜ., கூட்டணி. தேசத்திற்காக இணைந்த கூட்டணி. இயற்கையான கூட்டணி. இதில் கட்சிகளுக்கு இடையே உறுதியான பந்தம் உள்ளது. புதிய இந்தியா, வளர்ந்த இந்தியா, லட்சிய இந்தியா. அதுதான் என்.டி.ஏ.
கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது ‘டிரைலர்’ தான். இனி இன்னும் கடினமாக, வேகமாக உழைப்போம். நாங்கள் சொல்வதை செய்வோம் என்பதை மக்கள் அறிவர். எனவே, எதிர்க்கட்சிகளும் எங்களுடன் இணைந்து பணியாற்றி, நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தருவர் என நம்புகிறேன்.

கேரளாவில் முதல் முறையாக கணக்கை துவக்கி உள்ளோம். அருணாச்சல பிரதேசம், ஒடிசாவில் பெரிய வெற்றி பெற்றுள்ளோம். ஆந்திராவில் வரலாற்று வெற்றி கிடைத்துள்ளது.
தமிழகத்தில் வெற்றி பெறாவிட்டாலும், ஓட்டு சதவீதம் உயர்ந்துள்ளது. அதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
நாடு உச்சம் தொடுவதற்காக 10 ஆண்டுகள் உழைத்தோம். நல்லாட்சி என்பதே நம் இலக்கு. நம் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நல்லாட்சி அளித்துள்ளனர். அவர்கள் இணைந்திருப்பதால் நல்லாட்சியின் அர்த்தமாக தே.ஜ., கூட்டணி விளங்குகிறது.

இவ்வாறு மோடி பேசினார்.

18வது மக்களவை தேர்தலில் 240 இடங்களை கைப்பற்றிய பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் 3வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்திய வரலாற்றில் நேருவுக்கு பிறகு, பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சி அமைக்கும் உரிமையை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று (ஜுன் 7ந்தேதி)  நடைபெற்ற  தேசிய ஜனநாயக கூட்டணியின்  கூட்டத்தில், மோடி, பார்லிமென்ட் குழு  தலைவராக   ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து,  கூட்டணி கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதத்துடன், ஜனாதிபதியை சந்தித்தார். ஆட்சி அமைக்கும்படி ஜனாதிபதி முர்மு அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, நாளை  (ஜூன் 9ந்தேதி() இரவு 7:15 மணிக்கு மூன்றாவது முறையாக மோடி பிரதமர் பதவி ஏற்கிறார்.

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தேபாரத் ரெயில் என்ஜின் பெண் டிரைவருக்கு அழைப்பு…