டெல்லி: மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 72 பேர் இடம்பெற்றுள்ள நிலையில்,  எந்தெந்த மாநிலங்களுக்கு எத்தனை பேர்? என்ற விவரம் வெளியாகி உள்ளது.

பிரதமர் தலைமையிலான புதிய குழுவில் 30 கேபினட் அமைச்சர்கள், 5 சுயேச்சை அமைச்சர்கள் மற்றும் 36 இராஜாங்க அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். ஸ்மிரிதி இரானி, அனுராக் தாகூர், ராஜிவ் சந்திரசேகர், அர்ஜுன் முன்டா, நாராயண் ரானே, மீனாட்சி லேகி, விகே சிங் உள்பட முன்னாள் அமைச்சர்கள் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோருக்கு  இந்த  மோடியின் புதிய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.  அதற்கு பதிலாக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், பிரதமர் மோடியின் கட்சியான பாஜக, இந்த ஆண்டு வாக்கெடுப்பில் 240 இடங்களை வென்றது, பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவு. கூட்டணி கட்சிகள் அவருக்கு 272 பெரும்பான்மையை கடக்க உதவியது,  இதனால், தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது NDA 293 இடங்களை கைப்பற்றியது. இதனால் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற உள்ளது.

விடுதலைக்கு பின்னான இந்திய அரசியல் வரலாற்றில் ஜவஹர்லால் நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் இரண்டாவது நபர் என்ற பெருமையை நரேந்திர மோடி  பெற்றுள்ளார். டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று இரவு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவிப் பிரமாணம் எடுத்துள்ளார். 

இதில் பிரதமர் மோடியுடன் சுமார்  72 பேர்  மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். இவர்களில் 13 பேர் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.  இதில்,  5 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். பாஜக ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருந்த சந்திர பாபு நாயுடு, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிகளைச் சேர்ந்த  3 பேருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து முறையே தலா 2 அமைச்சர்கள் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து எல்.முருகன் மீண்டும் இணை அமைச்சர் ஆனார்.  உத்தரபிரதேசத்தில் இருந்து 9 அமைச்சர்களும், அதனைத்தொடர்ந்து பீகாரில் இருந்து 8 அமைச்சர்களும் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

மொத்தமாக கூட்டணி கட்சிகளுக்கு 11 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சராக பதவியேற்றவர்களுள் 7 பேர் பெண்கள் ஆவர். மொத்தம் உள்ள 72 அமைச்சர்களில் 30 கேபினட் அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள், 5 தனிப் பொறுப்பு பதவி உடையோர் இடம்பெற்றுள்ளனர். இதில் 61 அமைச்சர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 11 பேர் கூட்டணிக் கட்சிகளை சேர்த்தவர்கள் . மேலும் புதிய அமைச்சர்களில் 7 பேர் முன்னாள் முதலமைச்சர்கள் ஆவர். ஓபிசி வகுப்பு அமைச்சர் 27 பேரும், எஸ்.சி சமூக அமைச்சர்கள் 10 பேரும், எஸ்.டி சமூக அமைச்சர்கள் 7 பேரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு: எல். முருகன், நிர்மலா சீதாராமன்

கேரளா: சுரேஷ் கோபி

கர்நாடகா: ஷோபா கரந்த்லாஜே, ஹெச்.டி. குமாரசாமி, பிரஹலாத் ஜோஷி

ஆந்திர பிரதேசம்: சந்திரசேகர் பெம்மசானி, ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு

தெலுங்கானா: ஜி கிஷன் ரெட்டி, பாண்டி சஞ்சய்

மகாராஷ்டிரா: நிதின் கட்கரி, ரக்ஷா கட்சே, பிரதாப்ராவ் ஜாதவ், பியூஷ் கோயல், முரளிதர் மோகன், ராம்தாஸ் அத்வாலே

குஜராத்: அமித் ஷா, சிஆர் பாட்டீல் மற்றும் மன்சுக் மாண்டவியா

பீகார்: ஜிதன் ராம் மஞ்சி, ராம் நாத் தாக்கூர், நித்யானந்த் ராய், கிரிராஜ் சிங் மற்றும் சிராக் பாஸ்வான்

ஜார்க்கண்ட்: அன்னபூர்ணா தேவி, சந்திர பிரகாஷ்

உத்தர பிரதேசம்: ராஜ்நாத் சிங், ஜிதின் பிரசாத், பங்கஜ் சவுத்ரி, அனுப்ரியா படேல், ஜெயந்த் சவுத்ரி, பிஎல் வர்மா

மத்திய பிரதேசம்: சிவராஜ் சிங் சவுகான், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சாவித்ரி தாக்கூர்

ராஜஸ்தான்: அஷ்வினி வைஷ்ணவ், கஜேந்திர ஷெகாவத், பகீரத் சவுத்ரி, அர்ஜுன் ராம் மேக்வால்

ஹிமாச்சல பிரதேசம்: ஜேபி நட்டா

பஞ்சாப்: ரவ்னீத் சிக்பிட்டு

ஹரியானா: கிருஷ்ணபால் குர்ஜார், ராவ் இந்திரஜித் சிங், மனோகர் லால் கட்டார்

மேற்கு வங்கம்: சாந்தனு தாக்கூர்

டெல்லி: ஹர்ஷ் மல்ஹோத்ரா

அசாம்: சர்பானந்தா சோனோசல்

அருணாச்சல பிரதேசம்: கிரண் ரிஜிஜு

உத்தரகாண்ட்: அஜய் தம்தா

உள்பட மொத்தம் 72 பேர் அமைச்சர்களாகி உள்ளனர்.

Cabinet Ministers who took oath along with PM:

  1. Rajnath Singh
  2. Amit Shah
  3. Nitin Gadkari
  4. JP Nadda
  5. Shivraj Singh Chouhan
  6. Nirmala Sitharaman
  7. S Jaishankar
  8. Manohar Lal Khattar
  9. HD Kumaraswamy
  10. Piyush Goyal
  11. Dharmendra Pradhan
  12. Jitan Ram Manjhi
  13. Rajiv Ranjan Singh alias Lalan Singh
  14. Sarbananda Sonowal
  15. Dr Virendra Kumar
  16. Kinjarapu Ram Mohan Naidu
  17. Pralhad Joshi
  18. Jual Oram
  19. Giriraj Singh
  20. Ashwini Vaishnaw
  21. Jyotiraditya Scindia
  22. Bhupender Yadav
  23. Gajendra Singh Shekhawat
  24. Annapurna Devi
  25. Kiren Rijiju
  26. Hardeep Singh Puri
  27. Mansukh Mandaviya
  28. G Kishan Reddy
  29. Chirag Paswan
  30. CR Patil

Ministers of State With Independent Charge:

  1. Rao Inderjit Singh
  2. Jitendra Singh
  3. Arjun Ram Meghwal
  4. Prataprao Ganpatrao Jadhav
  5. Jayant Chaudhary

Minister of State

  1. Jitin Prasada
  2. Shripad Naik
  3. Pankaj Chaudhary
  4. Krishan Pal Gurjar
  5. Ramdas Athawale
  6. Ram Nath Thakur
  7. Nityanand Rai
  8. Anupriya Patel
  9. V Somanna
  10. Dr Chandra Sekhar Pemmasani
  11. SP Singh Baghel
  12. Shobha Karandlaje
  13. Kirti Vardhan Singh
  14. BL Verma
  15. Shantanu Thakur
  16. Suresh Gopi
  17. L Murugan
  18. Ajay Tamta
  19. Bandi Sanjay Kumar
  20. Kamlesh Paswan
  21. Bhagirath Chaudhary
  22. Satish Chandra Dubey
  23. Sanjay Seth
  24. Ravneet Singh Bittu
  25. Durga Das Uikey
  26. Raksha Khadse
  27. Sukanta Majumdar
  28. Savitri Thakur
  29. Tokhan Sahu
  30. Rajbhushan Chaudhary
  31. Bhupathiraju Srinivasa Varma
  32. Harsh Malhotra
  33. Nimuben Jayantibhai Bambhaniya
  34. Murlidhar Mohol
  35. George Kurian
  36. Pabitra Margherita