சென்னை:
தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், தான் பயணம் மேற்கொள்ளும் போது பொது மக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படக்கூடாது என்றும், தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.