சென்னை
சதுரங்கத்தில் கிராண்ட் மாஸ்டரான கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழக சிறுவன் பிரக்ஞானந்தாவை முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.
சதுரங்க விளையாட்டில் மிகவும் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவர் மஃக்னஸ் கார்ல்சன் ஆவார், இவர் உலக கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு இந்தியாவைச் சேர்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கும் இடையில் சதுரங்க போட்டி நடந்தது.
இந்த போட்டி சுற்றுகளில் இதுவரை 8 சுற்றுக்கள் முடிவடைந்துள்ளன. இதில் 31 வயதான மஃக்னஸ் கார்ல்சன் உடன் 16 வயதான பிரக்ஞானந்தா போட்டியிட்டு 39 ஆம் வது மூவில் வெற்றி பெற்றார். இதனால் பிரக்ஞானந்தாவை உலக அளவில் ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அவ்வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது டிவிட்டரில்,
”சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த #Chess ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது #GrandMaster @rpragchess -க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும்.”
எனப் பதிந்து பாராட்டி உள்ளார்.