ஜெனிவா: 2 தடுப்பூசிகளை கலந்து போட்டால், அது பயனர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்றும், 3வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கு அனுமதிப்பது குறித்து  போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது இல்லை  என  உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. ஒரே நிறுவன தடுப்பூசி மட்டுமே 2 டோஸ்களாக குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு போட்டுக்கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், சில இடங்களில், முதல்டோஸ் ஒரு நிறுவன தடுப்பூசியும், 2வது டோஸ் மற்றொரு நிறுவன தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. எதிர்பாராத விதமாகவும் சில இடங்களில் தவறுகள் ஏற்பட்டு விடுகிறது.

இதனால் எந்தவொரு பாதிப்பும் இல்லை என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் மருத்துவ நிபுணர்கள், இதனால் ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்து உள்ளனர். 2 நிறுவனத்தின் கொரோனா தடுப்பபு ஊசிகளை கலந்து போட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் பல நாடுகளில் உருவாகி இருக்கிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் கூறியதாவது:-

கொரோனாவுக்காக 2 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்பது குறித்த உலக சுகாதார நிறுவனம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அது சரியான நடவடிக்கையும் இல்லை. ஆனால்,  தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில்வ, 2 வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம் என்று  சிலர் சிபாரிசு செய்கின்றனர். இது ஆபத்தை விளைவிக்கும். இரண்டாம், மூன்றாம், நான்காம் தவணை தடுப்பூசிகளை எப்போது யார் செலுத்த வேண்டும் என்பதை மக்களே முடிவெடுத்தால் அது குழப்பமான சூழலை ஏற்படுத்தும்” என்றார்.

இதுதொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.  உரிய தரவுகளுடன் ஆய்வுகளின் முடிவுக்கு பிறகே 2 நிறுவன  தடுப்பூசிகளை கலந்துஊசிகளை பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.

அதுபோல, ‘உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  கொரோனாவுக்கு 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது இல்லை. அதற்கு பதிலாக பணக்கார நாடுகள் தங்களிடம் மிச்சம் உள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.

உலகளவில் கொரோனா இறப்புகள் 10 வாரங்களாக குறைந்திருந்த நிலையில், டெல்டா வகை தொற்றுகளால் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் ஐ.நா.வி.ன் கோவேக்ஸ் திட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் .

இவ்வாறு அவர் கூறினார்.

தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை போட்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.