இஸ்லாமாபாத்,

மிஷன் காஷ்மீர் என்ற பெயரில், காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் இந்திய படங்களை திரையிட பிரதமர் இம்ரான்கான் தடை விதித்து உள்ளார்.

ஜம்முகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான்,  இந்தியாவுடனான தூதரக உறவை துண்டிக்க இருப்பதாக அறிவித்து உள்ளது.

மேலும், வர்த்தக நடவடிக்கையை முடக்கியுள்ள பாகிஸ்தான், ரயில் போக்குவரத்து, விமான வான்வழி பாதை தடை போன்ற சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்,  இந்திய படங்கள்  பாகிஸ்தானில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சிறப்பு உதவியாளர் பிர்டோ1ஆஷிக் அவான் (Firdous Ashiq Awan,) கூறுகையில், ‘பாகிஸ்தானில் இந்திய படங்களை திரையிடக்கூடாது. அனைத்து வகையான இந்திய கலாசார நடவடிக்கைகளையும் தடை செய்வதற்கான கொள்கையை அரசாங்கம் வகுத்து வருகிறது’ என்று தெரிவித்து உள்ளார்.

இந்தியாவின் பாலிவுட் படங்களுக்கு பாகிஸ்தானில் தனி மவுசு உண்டு.  அங்குள்ள தியேட்டர் களில் சுமார் 70 சதவிகிதம் தியேட்டர்கள் இந்திய திரைப்படங்களே திரையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]